வாலி, இந்திரன், எமன் ஆகிய மூவரும் முறையே குரங்கு, அணில், காகம் (முட்டம்) வடிவில் இறைவனை வழிபட்ட தலமாதலால் 'குரங்கணில் முட்டம்' என்று அழைக்கப்படுகிறது.
மூலவர் 'வாலீஸ்வரர்' அழகிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். மேற்கு நோக்கிய சன்னதி. அம்பாள் 'இறையார் வளையம்மை' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றார்.
கோஷ்டத்தில் உள்ள விஷ்ணு துர்க்கை வலது கையில் பிரயோகச் சக்கரத்துடனும், இடது கையில் சக்கர முத்திரையுடனும் காட்சி தருகின்றாள். காலுக்குக் கீழே மகிஷாசுரனும் இல்லை.
பிரகாரத்தில் விநாயகர், காசி விஸ்வநாதர், பிரயோக சக்கரத்துடன் மகாவிஷ்ணு, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமண்யர், சப்த மாதர்கள், பைரவர், நவக்கிரகங்கள், நாக தேவதை ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.
இந்திரன், எமன், வாலி ஆகியோர் வழிபட்ட தலம்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|